Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“50,000 பேர் வேலையை இழக்க நேரிடும்” - டெல்லி ஆளுநர் மற்றும் அரசுக்கு பைக் டாக்சி ஓட்டுநர்கள் கடிதம்!

05:39 PM Nov 26, 2023 IST | Web Editor
Advertisement

டெல்லியில் காற்று மாசை தடுக்கும் வகையில், பைக் டாக்சி சேவை நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கு கட்டாயமாக மாறுவதற்கு அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து, இதனால் 50000 பேர் வேலையை இழக்க நேரிடுவதாக பைக் டாக்சிகள் சங்கத்தின் சார்பில் அரசு மற்றும் ஆளுநருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

Advertisement

தலைநகர் டெல்லியில் காற்று மாசை தடுக்கும் நோக்கில் பயணிகளுக்கு பைக் டாக்சி சேவை வழங்கும் நிறுவனங்கள் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு மாறுவதை கட்டாயமாக்கும் திட்டத்துக்கு ஆம் ஆத்மி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு டெல்லி ஆளுநர் அனுமதி வழங்கினார். விரைவில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இதனால் பைக் டாக்சி சேவையை நம்பி வாழ்வாதாரத்தை ஈட்டி வரும் சுமார் 50,000 பேர் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும் என பைக் டாக்சி ஓட்டுநர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து, ஆளுநர் மற்றும் ஆம் ஆத்மி அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில்,

“பெட்ரோல் பைக் ஓட்டி வரும் சாமானிய நபரால் திடீரென எப்படி எலக்ட்ரிக் பைக்குக்கு மாற முடியும்? சந்தையில் எலக்ட்ரிக் பைக்குகள் இல்லை. அதேபோல அவற்றை வாங்குவதற்கு எங்களிடம் பணமும் இல்லை” என அந்தக் கடிதத்தில் அப்னா பைக் டாக்சி சங்கம் தெரிவித்துள்ளது. தங்களது கோரிக்கை தொடர்பாக பலமுறை அரசு தரப்பை அணுகியும் அது கேட்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த மாதம் இருசக்கர வாகனத்தை கொண்டு உணவு மற்றும் பொருட்கள் டெலிவரி செய்யும் சேவையில் ஈடுபட்டு வரும் நபர்கள் மின்சார இருசக்கர வாகனத்துக்கு மாறுவதற்கு கொடுக்கப்பட்டுள்ள அதே காலக்கெடுவை தங்களுக்கும் வழங்க வேண்டும் என பைக் டாக்சி ஓட்டுநர்கள் தெரிவித்திருந்தனர்.

காற்று மாசை குறைக்கும் அரசின் நோக்கத்தை வரவேற்கிறோம். அதே நேரத்தில் பைக் டாக்சி ஓட்டுநர்கள் மின்சார இருசக்கர வாகனங்களை மட்டுமே இயக்க வேண்டுமென்ற கடுமையான விதிமுறை, தங்கள் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயல் என பைக் டாக்சி ஓட்டுநர்கள் சார்பில் தெரிவித்துள்ளனர்.

Tags :
AAPBike taxiDelhi govtDelhi LGGovernorJob lessNews7Tamilnews7TamilUpdatesunemployment
Advertisement
Next Article