For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சர்ச்சைக்குரிய பதிவுகள் - #ElonMusk-க்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையா?

09:16 PM Sep 20, 2024 IST | Web Editor
சர்ச்சைக்குரிய பதிவுகள்    elonmusk க்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையா
Advertisement

அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் குறித்த பதிவுக்காக எலான் மஸ்க்குக்கு கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Advertisement

அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களமிறங்கி உள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிருகிறார். தேர்தல் நெருங்கியுள்ளதை அடுத்து தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்த சூழலில், கடந்த 15ம் தேதி புளோரிடா கோல்ப் கிளப்பில் விளையாட டிரம்ப் சென்றார். அப்போது அங்கு திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.

இதனையடுத்து, அதிகாரிகள் டிரம்பை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். மேலும், அதிபர் வேட்பாளர் டிரம்ப் பாதுகாப்பாக உள்ளார் என அவரது கட்சி எக்ஸ் தளத்தில் பதிவிட்டது. முன்னதாக, கடந்த ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் தோ்தல் பிரசாரத்தில் டிரம்ப் ஈடுபட்டிருந்தபோது அவா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதும், அதில் அவருடைய வலதுகாதில் காயம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாவது முறையாக நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்த சூழலில், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த ஒருவர், டொனால்டு டிரம்ப்பை ஏன் கொல்ல முயற்சிக்கின்றனர்? என்று எக்ஸ் தள பக்கத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். அதனைப் பகிர்ந்த பிரபல உலக பணக்காரரும் டெஸ்லா மற்றும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க், “பைடன் மற்றும் கமலாவை கொல்வதற்கு யாரும் முயற்சிகூட செய்யவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

எலான் மஸ்கின் இந்த கருத்துக்கு பயனர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனையடுத்து, நகைச்சுவையாக பதிவிட்டதாகக் கூறிய எலான் மஸ்க், அப்பதிவினை நீக்கிவிட்டார். இருப்பினும், அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபரை, வெளிப்படையாக அச்சுறுத்தியதற்காக எலான் மஸ்க் மீது 5 ஆண்டுகள் வரையிலான கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Tags :
Advertisement