For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

5 ஆண்டுகளாக வாடகை செலுத்தாத நபர்: ஹோட்டலை உரிமை கோரியதால் பரபரப்பு - எங்கே நடந்தது?

04:04 PM Feb 22, 2024 IST | Web Editor
5 ஆண்டுகளாக வாடகை செலுத்தாத நபர்  ஹோட்டலை உரிமை கோரியதால் பரபரப்பு   எங்கே நடந்தது
Advertisement

5 ஆண்டுகளாக வாடகையே செலுத்தாமல் இலவசமாக ஹோட்டல் அறையை பயன்படுத்திவிட்டு திடீரென ஒருநாள் இந்த ஹோட்டல் என்னுடையது என சொந்தம் கொண்டாடியுள்ளார்.  யார் அந்த நபர்..? எங்கே நடந்தது அந்த சம்பவம் விரிவாக காணலாம்.

Advertisement

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஒரு ஹோட்டல் உள்ளது.  அந்த ஹோட்டலின் பெயர் “ நியூ யார்கர்” என்பதாகும்.  இந்த ஹோட்டலில் கடந்த 2018ம் ஆண்டு ஒரு நபர் ஒரே ஒரு நாள் தங்கிக் கொள்கிறேன் எனக் கூறி ஒரு நாளுக்கான கட்டணத்தை செலுத்திவிட்டு அங்கே தங்கியுள்ளார்.  இதனைத் தொடர்ந்து ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் அந்த நபர் தனக்கு குறைந்தபட்ச வாடகையோடு ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம் என கேட்டுள்ளார்.

இதற்கு ஹோட்டல் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.  இதன் பின்னர் தனது பொருட்களை அங்கேயே வைத்து விட்டு அவர் கிளம்பியுள்ளார்.  ஹோட்டலில் உள்ள ஆவணங்களின்படி  அவரது பெயர் மிக்கி பாரெட்டோ. அவரது வயது 48 எனத் தெரிய வந்தது. அவர் தனது நண்பரின் ஆலோசனைப்படி இந்த ஹோட்டலில் கட்டணமில்லாமல் தங்குவதற்காக வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

அந்த வழக்கின்படி 1969க்கு முன்பு கட்டப்பட்டிருந்த கட்டடங்களில் ஒரு அறையில் தங்கியிருப்பவர்கள் 6 மாத குத்தகைக்கு கோருவதற்கு சட்டம் அனுமதிக்கிறது.  நான் ஏற்கனவே ஒரு இரவுக்கு பணம் செலுத்த தங்கியதால் ஹோட்டலில் வாடகைதாரராகி விட்டேன் எனக் கூறி வழக்கில் வாதங்களை முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து நீதிமன்றமும் அவருக்கு அறையில் குத்தகைக்கு தங்கிக் கொள்ள அனுமதி வழங்கியது.

மழை விட்டாலும் காற்று சும்மா விடுவதாயில்லை என்கிற கதைப் போல தனக்கு தங்கிக் கொள்ள அறை கிடைத்த போதும் பாரெட்டா சும்மா விடுவதாக இல்லை.  2019 ஆம் ஆண்டில்,  நியூயார்க் நகர நிதித் துறையின் ஆவணங்களில் போலி ஆவணங்களைப் பதிவேற்றினார்.  ஹோலி ஸ்பிரிட் அசோசியேஷன் (எச்எஸ்ஏ) என்ற மத அமைப்பிடமிருந்து நியூ யார்க்கர் ஹோட்டலின் முழு உரிமையையும் தனக்கு மாற்றுவதாகக் கூறி மோசடி பத்திரத்தையும் அவர் பதிவேற்றினார்.

இதனைத் தொடர்ந்து 5 ஆண்டுகள் வாடகை ஏதும் செலுத்தாத நிலையில் ஹோட்டலின் இன்னொரு அறையில் தங்கியிருந்த நபரிடம் நான் தான் இந்த ஹோட்டலின் முதலாளி எனவே தனக்குத் தான் இனிமேல் வாடகை செலுத்த வேண்டும் எனக் கூறி சண்டை பிடித்துள்ளார்.  இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் கவனம் பெறத் தொடங்கியது. ஹோட்டல் நிர்வாகத்தினர் நீதிமன்றத்தை நாடினர்.  இதனைத் தொடர்ந்து மோசடியான பத்திரங்களை தயாரித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பாரேட்டாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags :
Advertisement