கிணற்றில் கார் பாய்ந்து 5 பேர் உயிரிழப்பு - கனிமொழி எம்.பி நேரில் ஆறுதல்!
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே நேற்று (மே.17) மாலை 8 நபர்களுடன் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று நிலை தடுமாறி சாலையின் அருகில் இருந்த தண்ணீர் நிரம்பிய கிணற்றில் பாய்ந்து விபத்துள்ளானது.
ரவி கோயில்பிச்சை (வயது 60), ஹெச்சியா கிருபாகரன் (வயது 49) , மோசஸ் (வயது 50) வசந்தா (வயது 49), ஸ்டாலின் (1 வயது) ஆகிய ஐந்து நபர்கள் தண்ணிரில் மூழ்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து கிணற்றில் இருந்து உயிரிழந்தவர்களின் உடல்கள் மற்றும் அவர்களது உடமைகள் மீட்கப்பட்டது.
தொடர்ந்து இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கள் தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்தார்.
தூத்துக்குடி சாத்தான்குளத்தில் நேற்று வேன் கவிழ்ந்து எதிர்பாராத விதமாக உயிரிழந்த ஐந்து பேரின் உடலுக்கு திருநெல்வேலி அரசு பொது மருத்துவமனையில் இன்று மரியாதை செலுத்தினேன்.
அவர்களது உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டேன். pic.twitter.com/oOxtcD41sC
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) May 18, 2025
இந்த நிலையில் சம்பவம் நடத்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தூத்துக்குடி சாத்தான்குளத்தில் நேற்று வேன் கவிழ்ந்து எதிர்பாராத விதமாக உயிரிழந்த ஐந்து பேரின் உடலுக்கு திருநெல்வேலி அரசு பொது மருத்துவமனையில் இன்று மரியாதை செலுத்தினேன். அவர்களது உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தேன்” இவ்வாறு கூறியுள்ளார்.