Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் - தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல்!

11:14 AM Nov 15, 2023 IST | Web Editor
Advertisement

பாகிஸ்தானில் புதன்கிழமை காலை 5.35 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தேசிய நில அதிர்வு மையம் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது:

பாகிஸ்தானில் புதன்கிழமை காலை 5.35 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் காலை 5.35 மணியளவில் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இதையும் படியுங்கள்:நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி! – குவைத்தில் சிக்கியிருந்த பெண் தாயகம் மீட்பு …

இந்த நடுநடுகத்தால் உயிர் சேதமோ அல்லது சேதங்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும், இலங்கை தலைநகர் கொழும்புவில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.31 மணியளவில் 1,326 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்திய பெருங்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 எனப் பதிவாகியுள்ளது.

இதனால் தலைநகர் கொழும்புவில் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நடுநடுகத்தால் உயிர்சேதமோ அல்லது சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

Tags :
5.2 RichterColomboearthquakeIndian oceanINFORMATIONNational Seismological CenterpakistanSri Lanka
Advertisement
Next Article