சென்னையில் 4வது மலர் கண்காட்சி - நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் #MKStalin!
சென்னையில் 4-ஆவது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார்.
சென்னை அண்ணா மேம்பாலம் ராதாகிருஷ்ணன் சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில் செம்மொழிப்பூங்கா அமைந்துள்துள்ளது. நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த பூங்காவை 2010ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி திறந்து வைத்தார்.இந்த பூங்காவில் சுமார் 800 வகையான விதவிதமான செடிகள் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப் படுகிறது. அரிய வகை மரங்களும் உள்ளன.
செம்மொழி பூங்காவில் நாளை மறுநாள் (ஜன.2) மலர் கண்காட்சி தொடங்க உள்ளது. இந்த மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இது சென்னையில் நடைபெறும் 4-வது மலர் கண்காட்சி ஆகும். இந்த கண்காட்சியில் பூக்களால் செய்யப்பட்ட யானை, பட்டாம் பூச்சி, தொடர்வண்டி, அன்னபறவை, மிக்கி மவுஸ் உள்ளிட்டவை இடம்பெறவுள்ளன. இந்த கண்காட்சி ஜனவரி 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கண்காட்சி நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பூத்தொட்டிகள் அமைக்கும் பணி, பூக்களால் அமைக்கப்பட உள்ள அலங்கார வளைவுகள் அமைக்கும் பணி, பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டும் பணி மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட செடிகளை அடுக்கி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.