4வது நாளை கடந்த உண்ணா விரத போராட்டம் - டெல்லி அமைச்சர் அதிஷிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி!
4வது நாளாக உண்ணா விரத போராட்டம் நடத்தி வந்த டெல்லி அமைச்சர் அதிஷிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் மாதக்கணக்கில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அந்த மாநில அரசு அண்டை மாநிலங்களான இமாச்சலப் பிரதேசம், ஹரியானாவிலிருந்து டெல்லிக்கு கூடுதல் நீர் பெற்றுத்தர உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இமாச்சலப் பிரதேசத்திலிருந்து டெல்லிக்கு வரும் நீரை, தடுக்கக் கூடாது என ஹரியாணா மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கூறுகையில், “ஹரியானா மாநில அரசு யமுனையில் இருந்து டெல்லிக்கு உரிய தண்ணீரை விடுவிக்கவில்லை. கடந்த ஜூன் 21ம் தேதி 110 மில்லியன் கேலன் (எம்ஜிடி) தண்ணீரை மட்டுமே அம்மாநில அரசு விடுவித்துள்ளது” என கூறினார்.
இந்த நிலையில் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்த அமைச்சர் அதிஷிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக எல்என்ஜேபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது தொடர்பாக கூறிய ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கூறியதாவது..