48 ரூபாய்க்கு 48 முட்டை! ஆஃபருக்கு ஆசைப்பட்டு ரூ.48000 இழந்த பெண்!
பெங்களூருவில் பெண் ஒருவர் இணையத்தில் 48 ரூபாய்க்கு 48 முட்டை என்ற ஆஃபருக்கு ஆசைப்பட்டு, ரூ.48,199 ரூபாயை இழந்துள்ளார்.
பெங்களூரு வசந்த் நகரில் வசித்து வருபவர் ஷிவானி. ஒரு பிரபல நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றை அவர் பார்த்துள்ளார். அதில் 8 டஜன் முட்டைகளை ₹ 99 க்கு விற்பனை செய்வதாகவும், டெலிவிரி சார்ஜ் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பி 4 டஜன் முட்டை ரூ. 48 என்ற என்ற ஆப்ஷனை தேர்வு செய்து ஆர்டர் செய்துள்ளார். தொடர்ந்து பரிவர்த்தனை முறை பக்கத்திற்கு அழைத்து சென்றுள்ளது. அதில் கிரெடிட் கார்ட் மூலம் மட்டுமே பணம் செலுத்தும் முறை இருந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர் தனது கிரெடிட் கார்ட் விவரங்களை முழுவதும் உள்ளிட்டுள்ளார். அதில் கிரெடிட் கார்டின் காலாவதி தேதி, சிவிவி போன்ற அனைத்து தகவல்களையும் உள்ளிட்டு க்ளிக் செய்துள்ளார். உடனே இவருடைய பொபைல் எண்ணிற்கு ஓடிபி நம்பர் வந்துள்ளது. ஆனால் அதனை உள்ளிடுவதற்கு முன்பே அவரது கிரெடிட் கார்டிலிருந்து ரூ. 48,199 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஷிவானி தனது வங்கியை தொடர்பு கொண்டுள்ளார்.