For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாடு முழுவதும் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான 4732 வழக்குகள் நிலுவை!

தமிழ்நாட்டில் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றங்களில் ஜனவரி 1ம் தேதி வரையிலான நிலவரப்படி 220 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஜய் ஹசாரியா தகவல் தெரிவித்துள்ளார்.
03:17 PM Feb 09, 2025 IST | Web Editor
தமிழ்நாட்டில் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றங்களில் ஜனவரி 1ம் தேதி வரையிலான நிலவரப்படி 220 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஜய் ஹசாரியா தகவல் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் எம்பி  எம்எல்ஏக்கள் மீதான 4732 வழக்குகள் நிலுவை
Advertisement

நாடு முழுவதுமம் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விரைந்து விசாரித்து முடிக்கக்கோரி, பா.ஜ.க வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

Advertisement

அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு விசாரணை மற்றும் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது தொடர்பான அறிக்கையை அளிக்க, உச்ச நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் வழக்கறிஞர் விஜய் ஹசாரியாவை (Amicus curiae) நியமித்தது.

இந்நிலையில் இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்த வழக்கறிஞர் விஜய் ஹசாரியா, நாடு முழுவதும் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றங்களில் 4732 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று கூறியுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றங்களில் ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி, 220 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement