சீனா, அமெரிக்கா இடையே 45 ஆண்டுகளாக தூதரக உறவு - தலைவர்கள் வாழ்த்து!
சீனா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவின் 45 ஆண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது.
சீனா மற்றும் அமெரிக்கா இரு நாடுகளுக்கு இடையேயான தூதராக உறவு 2024 ஆம் ஆண்டோடு 45-வது ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதன் காரணமாக இரு நாட்டு தலைவர்களும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
சீனா, அமெரிக்கா இடையேயான தூதரக உறவின் 45ம் ஆண்டு நிறைவு விழா நேற்று (ஜன.1) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
இதையும் படியுங்கள் : “எளிய மக்களும் பயன்படுத்தலாம்..!” - அம்ரித் பாரத் ரயிலுக்கு பொதுமக்கள் வரவேற்பு
சீன அதிபர் ஜி ஜின்பிங் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், "கடந்த 45 ஆண்டுகளில், சீனா, அமெரிக்கா இடையேயான உறவு பல ஏற்றத்தாழ்வுகளை கடந்து, ஒட்டுமொத்தமாக முன்னேறியுள்ளது. இது இரு நாட்டு மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உலக அமைதி மற்றும் செழுமையையும் மேம்படுத்தியுள்ளது. இந்த புதிய யுகத்தில் சீனாவும் அமெரிக்காவும் இணைந்து கூட்டு முயற்சியை மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.