Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திமுக தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் - 45 கட்சிகளுக்கு அழைப்பு!

தொகுதி மறுவரையறை தொடர்பாக நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு மொத்தமாக 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
09:21 AM Feb 26, 2025 IST | Web Editor
Advertisement

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (பிப்.25) அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொகுதி மறுவரையரை தொடர்பாக மார்ச் 5ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்திருந்தார்.

Advertisement

மேலும், அனைத்துக் கட்சிகளும்  இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு அவர் கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில், தமிழ்நாடு அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு மொத்தமாக 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, இக்கூட்டத்திற்கு அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட  கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு அழைக்கப்படவிருக்கும் கட்சிகள்: 

1.திராவிட முன்னேற்றக் கழகம்
2.இந்திய தேசிய காங்கிரஸ்
3.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
4.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
5.இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
6.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
7.விடுதலை சிறுத்தைகள் கட்சி
8.மனிதநேய மக்கள் கட்சி
9.அகில இந்திய பார்வர்டு பிளாக்
10.தமிழக வாழ்வுரிமை கட்சி
11.மக்கள் நீதி மையம்
12.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
13.ஆதி தமிழர் பேரவை
14.முக்குலத்தோர் புலிப்படை
15.மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
16.மக்கள் விடுதலை கட்சி
17.அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
18.பாட்டாளி மக்கள் கட்சி
19.தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்)
20.தேசிய முற்போக்கு திராவிட கழகம்
21.அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
22.பாரதிய ஜனதா கட்சி
23.தமிழக வெற்றிக் கழகம்
24.நாம் தமிழர் கட்சி
25.புதிய தமிழகம்
26.புரட்சி பாரதம் கட்சி
27.தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
28.புதிய நீதிக் கட்சி
29.இந்திய ஜனநாயகக் கட்சி
30.மனிதநேய ஜனநாயகக் கட்சி
31.இந்திய சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி
32.இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்
33.பெருந்தலைவர் மக்கள் கட்சி
34.அனைத்து இந்திய மூவேந்தர் முன்னணி கழகம்
35.பசும்பொன் தேசிய கழகம்
36.அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன்
37.தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி
38.கலப்பை மக்கள் இயக்கம்
39.பகுஜன் சமாஜ் கட்சி
40.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை
41.ஆம் ஆத்மி கட்சி
42.சமதா கட்சி
43.தமிழ்ப்புலிகள் கட்சி
44.கொங்கு இளைஞர் பேரவை
45.இந்திய குடியரசு கட்சி

Tags :
all party meetingcm stalinCMO TAMIL NADUDMKMK Stalinnews7 tamilNews7 Tamil Updatestamil naduTN Govt
Advertisement
Next Article