அதிவிமரிசையாக நடைபெற்ற காரணகடல் முகைதீன் ரிஃபாயி தர்கா 425வது கந்தூரி விழா!
கல்லாரில் உள்ள பழமையான ஹலிபத்து ஷெய்கு முகைதீன் ரிஃபாயி தர்காவின் 425வது ஆண்டு கந்தூரி விழா நேற்று அதிவிமரிசையாக நடைபெற்றது.
நாகப்பட்டினம் மாவட்டம், கல்லாரில் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான காரணகடல்
ஹலிபத்து ஷெய்கு முகைதீன் ரீஃபாயி தர்காவின் கந்தூரி விழா நேற்று நடைபெற்றது.
425 ஆம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கந்தூரிவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ரிஃபாயி தரிக்கா எனப்படும் கத்தி
விளையாட்டு நேற்று இரவு அதி விமர்சையாக நடைபெற்றது.
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அக்கரைப்பேட்டை, கல்லார், கீச்சாங்குப்பம் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் கந்தூரி விழாவிற்கு தலைமை வகித்தனர். விழாவில் நாகூர்
ஆண்டவரின் சீடர்களான பக்கீர்மார்கள் கூரிய கத்தி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு
உடலில் தங்களை தாங்களே வருத்திக்கொண்டு சாகசங்கள் செய்தும், கத்தி மீது ஏறி
நின்று வழிபாடும் நடத்தினர்.
இந்த விழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு எலுமிச்சை சாறு படையலிட்டு, வேண்டுதல் நிறைவேற தூவசெய்த மலர் மாலை பிரசாதமாக வாங்கி சென்றனர். அதனைத் தொடர்ந்து சந்தனக்கூடு ஊர்வலம் இன்று அதிகாலை நடைபெற்றது. மின் விளக்குக்களால்அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அதிகாலை ஹலிபத்து ஷெய்கு முகையதீன் ரீஃபாயி நினைவிடத்தில் சந்தனம் பூசும் வைபோகம் நடைபெற்றது.
இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.