காதலர் தினத்தன்று நிமிடத்திற்கு 409 கேக்களை டெலிவரி செய்த ஸ்விக்கி!
காதலர் தினத்தன்று நிமிடத்திற்கு 409 கேக்குகளை டெலிவரி செய்ததாக ஸ்விக்கி அறிவித்துள்ளது.
பிப்ரவரி 14 உலக காதலர் தினம் ஆகும். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர் தினத்தன்று தனது மனதிற்கு பிடித்தவர்களிடம் தனது காதலை வெளிப்படுத்தினர். பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி பிப். 14ஆம் தேதி வரை ஒரு வாரம் காதலர் தின வாரமாகவும் கடைபிடிக்கப்படுகிறது. காதலர் தினம் அனைவராலும் கொண்டாடப்படுகிறது (சிங்கிள்ஸை தவிர).
இந்த ஒரு வார காலகட்டத்தில் ரோஸ் டே, ப்ரொப்போஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டே, வாலென்டைன்ஸ் டே என 7 நாட்களுக்கு 7 விதவிதமான தினங்களை காதலர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். காதலன்/காதலியிடம் ரோஜா பூ, மோதிரம், கிரிட்டிங்ஸ் கார்டுகளை கொடுத்து தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் வழக்கம் காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. மேலும் பலர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்வர்.
ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ மட்டுமின்றி மற்ற உணவு நிறுவனங்களிலும் மற்ற நாட்களை விட நேற்று அதிக ஆர்டர்கள் டெலிவரி செய்யப்பட்டதாக உணவு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.