For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தூத்துக்குடியில் 40,000 டன் உப்பு நாசம் -  அரசு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை!

11:26 AM Dec 28, 2023 IST | Web Editor
தூத்துக்குடியில் 40 000 டன் உப்பு நாசம்    அரசு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை
Advertisement

தூத்துக்குடியில் உற்பத்தி செய்யப்பட்ட 40,000 டன் உப்பு,  மழை வெள்ளத்தில் கரைந்து
வீணானது.  தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்க உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான
தலைவன்வடலி, சாகுபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 800 ஏக்கரில்
உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.  ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் தொடங்கி நவம்பர்
மாதம் வரை உற்பத்தி செய்யும் பணி நடக்கிறது.

இதையும் படியுங்கள்:  “ஐந்தரை அடி இமயம்..” – யுவன் இசையில் கலைஞர் 100ஆண்டு விழாவிற்காக தயாராகி வரும் பாடல்.!

இதனையடுத்து உற்பத்தி செய்யப்பட்ட உப்பு,  உப்பளம் அருகில் சேமித்து வைக்கப்பட்டு பின்னர் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.   இந்தநிலையில் இந்தாண்டு உற்பத்தி செய்யப்பட்டு 40,000 டன் உப்பு சேமித்து வைக்கப்பட்டது.  இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிச.17, 18-ம் தேதிகளில் வரலாறு காணாத அளவிற்கு பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சேமித்து வைக்கப்பட்ட உப்பு கரைந்து வீணானது.

இதனால் சுமார் ரூ.8 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.  இதனால் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட சுமார் 2000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து தமிழ்நாடு அரசு முழுமையாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட உப்பு உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.  மேலும் இந்த தொழிலை காப்பாற்ற அரசு வட்டி இல்லாத கடன் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
Advertisement