4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.!
நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இந்தியாவின் மிசோரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களின் முடிவுகள் டிச.3ம் தேதியான இன்று அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது
நடந்து முடிந்த 4 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் :
- ராஜஸ்தான் 75.45%
- சத்தீஸ்கர் 67.34%
- மத்திய பிரதேசம் 71.11%
- மிசோரம் 78%
- தெலங்கானா 71.14%
இந்த நிலையில் நவம்பர் 30 ஆம் தேதியன்று நடந்து முடிந்து 5 மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. இந்த நிலையில் காலை 8 மணிக்கு நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
முதலில் தபால் வாக்குகளும் அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் மூன்றடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.