Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மக்களவைத் தேர்தலோடு 4 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு!

04:09 PM Mar 16, 2024 IST | Web Editor
Advertisement

ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisement

நாடாளுமன்ற மக்களவை மற்றும் சில மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் கமிஷன் இன்று (மார்ச் 16) அறிவிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தற்போதைய மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16-ம் தேதியுடன் நிறைவடைவதால் அதற்கு முன்பே புதிய அவையை அமைக்க வேண்டும் என்பதால் மக்களவைத் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தார்.

இதனிடையே சில மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலமும் வெவ்வேறு தேதிகளில் நிறைவடைவதால் அதற்கான தேர்தல் தேதிகளையும் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. அதன்படி ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய சட்டசபைகளின் பதவிக்காலம் ஜூன் மாதம் வெவ்வேறு தேதிகளில் முடிகிறது.

இந்த 4 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதிகள் பின்வருமாறு:

வாக்குப்பதிவு – மே 13, 2024
வாக்கு எண்ணிக்கை – ஜூன் 4, 2024

வாக்குப்பதிவு – ஏப்ரல் 19, 2024
வாக்கு எண்ணிக்கை – ஜூன் 4, 2024

வாக்குப்பதிவு – ஏப்ரல் 19, 2024
வாக்கு எண்ணிக்கை – ஜூன் 4, 2024

வாக்குப்பதிவு – மே 13, 2024 (28 தொகுதிகள்), மே 20, 2024 (35 தொகுதிகள்), மே 25 (42 தொகுதிகள்), ஜூன் 1 (42 தொகுதிகள்)

வாக்கு எண்ணிக்கை – ஜூன் 4, 2024

Tags :
AnnouncementdateECIelection 2024ELECTION COMMISSION OF INDIAElections2024News7Tamilnews7TamilUpdatesParliament Election 2024Rajiv Kumar
Advertisement
Next Article