மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் எல்லையில் 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!
மகாராஷ்டிரம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் எல்லையில், அமைந்துள்ள கோபார்ஷி வனப்பகுதியில், நக்சல்கள் பதுங்கியுள்ளதாக, பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் மற்றும் காவலர்கள் இணைந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில்,இன்று காலை தேடுதல் நடவடிக்கைன் போது அப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்கள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் தொடுத்தனர். இதனை தொடர்ந்து இருதரப்பிற்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
இந்த சண்டையில் 3 பெண்கள் உள்பட 4 நக்சல்களின் உயிரிழந்ததாக, தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இச்சண்டையில் ஒரு எஸ்.எல்.ஆர் ரைபிள், இரண்டு ஐ.என்.எஸ்.ஏ.எஸ் ரைபிள்கள் மற்றும் ஒரு .303 ரைபிள் உள்ளிட்ட நக்சல்களில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து கோபார்ஷி வனப் பகுதியில், நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.