Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஒரே தேதியில் வெளியாகும் 4 திரைப்படங்கள்! லேட்டஸ்ட் அப்டேட்!

11:14 AM Jul 25, 2024 IST | Web Editor
Advertisement

தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 15ம் தேதி 4 முக்கிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. 

Advertisement

இந்தியாவில் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாப்படுகிறது. இதனால், தொடர்ந்து விடுமுறை நாட்களாக வருவதால் பல திரைப்படங்கள் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக உள்ளது. அந்த வகையில் அன்று 4 திரைப்படங்கள் வெளியாக உள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 1900 களில் கோலார் கோல்ட் ஃபீல்ட்டில் {கே.ஜி.எஃப்} தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமுதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் பிரசாந்த் நீண்ட இடைவேளைக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'அந்தகன்'. இப்படத்தில் கார்த்திக், சிம்ரன், வனிதா, கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த் சமுத்திரகனி என ஏராளமானோர் நடித்துள்ளனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : ‘விடியல்’ திட்டத்தின் மூலம் 450 கோடி முறை அரசுப் பேருந்துகளில் பெண்கள் பயணம்! தமிழ்நாடு அரசு தகவல்

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரகு தாத்தா’ திரைப்படத்தை ‘ஃபேமிலி மேன்’ எனும் விருது பெற்ற எழுத்தாளர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அருள்நிதி நடிப்பில் டிமாண்டி காலனி திரைப்படம் கடந்த 2015ம் ஆண்டு வெளியானது. தற்போது டிமாண்டி காலனி திரைப்படத்தின் 2ம் பாகத்தில் நடிகர் அருள்நிதியுடன் நடிகை பிரியா பவானி சங்கரும் இணைந்துள்ளார். இந்த திரைப்படத்தை சாம் சி.எஸ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Tags :
#cinemaupdatesAndaganaugust releaseDemandi ColonyMoviesRaghu DattaTangalan
Advertisement
Next Article