For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மத்திய பிரதேசத்தில் கழிவுநீர் தொட்டியில் இருந்து 4 உடல்கள் மீட்பு - போலீசார் தீவிர விசாரணை !

07:45 AM Jan 05, 2025 IST | Web Editor
மத்திய பிரதேசத்தில் கழிவுநீர் தொட்டியில் இருந்து 4 உடல்கள் மீட்பு    போலீசார் தீவிர விசாரணை
Advertisement

மத்திய பிரதேசத்தில் வீட்டின் கழிவுநீர் தொட்டியில் இருந்து 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் கழிவுநீர் தொட்டியில் இருந்து 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஷிவ்குமார் வர்மா கூறியதாவது,

"மத்தியப் பிரதேசத்தின் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் கழிவுநீர் தொட்டியில் இருந்து 4 உடல்கள் மீட்கப்பட்டன. இது பல கொலைகளின் வழக்காக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இந்த வீடு மாவட்ட தலைநகரிலிருந்து 30 கி.மீ., தொலைவில் உள்ள பார்கவான் காவல் நிலைய எல்லைக்குள் உள்ளது. கழிவுநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக உள்ளூர்வாசி ஒருவர் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தொட்டியில் இருந்த 4 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் ஒருவர் வீட்டு உரிமையாளர் ஹரி பிரசாத் பிரஜாபதியின் மகன் சுரேஷ் பிரஜாபதி (30), மற்றொருவர் கரன் ஹல்வாய் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மற்ற இரண்டு உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. முதற்கட்ட விசாரணையின்படி, சுரேஷ் மற்றும் கரண் ஆகியோர் நண்பர்களுடன் சேர்ந்து ஜனவரி 1ம் விருந்துகாக வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் வளாகத்தில் கொல்லப்பட்டு உடல்களை கழிவுநீர் தொட்டியில் வீசியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” இவ்வாறு அவர் கூறினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
Advertisement