For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வீடு பார்க்க வந்தது போல நடித்து மூதாட்டியைக் கொலைசெய்து நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது!

06:43 AM Apr 06, 2024 IST | Web Editor
வீடு பார்க்க வந்தது போல நடித்து மூதாட்டியைக் கொலைசெய்து நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
Advertisement

ஓசூரில் வாடகைக்கு வீடு பார்க்க வந்தது போல நடித்து மூதாட்டிக்கு மயக்க
மருந்து தெளித்து வாயில் துணியைத் திணித்து கழுத்து நெரித்துக்கொலைசெய்து 5
சவரன் நகை பறிப்பு சம்பவத்தில் 2 பெண்கள் உட்பட நான்கு பேர் கைது.

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் எம் ஜி ரோடு பகுதியில் மூன்று மாடிகள் கொண்ட
வீட்டில் இரண்டாவது தளத்தில் தனியாக வசித்து வந்தவர் சரளா தேவி(67). இவருக்கு
மூன்று மகள்கள். ஒரு மகன் மூன்றாவது தளத்தில் வசித்து வந்துள்ளனர்.

வீட்டின் கீழ் தளம் வாடகைக்கு விடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தால் கணவன்
மனைவி போல் இரண்டு பேர் கடந்த ஒன்றாம் தேதி வாடகைக்கு வீடு பார்ப்பது போல
வந்தவர்கள் கீழ் தளத்தில் மூதாட்டிக்கு மயக்க மருந்து தெளித்து வாயில் துணியை
திணித்து மூச்சு திணற வைத்து கொலை செய்து 5 சவரன் தங்கச் சங்கிலியையும் பறித்துச்
சென்றனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து நகர போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை மற்றும்
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை கொண்டு கொலையாளிகளைத் தேடி வந்த நிலையில் சம்பவத்தில் தொடர்புடையதாக அரசனட்டி பகுதியைச் சேர்ந்த பட்டதாரி
வாலிபர் திவாகரை (வயது 30) கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் தனியார் நிறுவனத்தில் வேலை புரிந்துவிட்டு வேலையிலிருந்து நிறுவனம் வெளியேற்றி
உள்ளனர்.

இந்த நிலையில் திவாகருக்கு உடந்தையாக காவேரிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த
சாந்தி (வயது 30)  இவர்களுக்கு உடந்தையாக திவாகரின் அக்கா சுரேகா (வயது 36) என்பவரும் அத்திப்பள்ளி பகுதி எடவன அள்ளியை சேர்ந்த பாலாஜி (வயது 39) என்பவரையும் கொலை கொள்ளையில் ஈடுபட்டதற்காக கைது செய்தனர்.

இவர்கள் ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் வழி பறி சம்பவங்களிலும் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. கொலைக்குப் பயன்படுத்திய இரண்டு இரு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு லட்சம் மதிப்பிலான 5 சவரன் தங்க நகையையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.  இதை அடுத்து நான்கு பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Tags :
Advertisement