3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றது. தொடர் 1 – 1 என சமனில் இருக்கும் நிலையில், ராஜ்கோட்டில் 3வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கியது.
தொடர்ந்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் முதலில் களமிறங்கிய இந்தியா 445 ரன்களை எடுத்து, ரோகித் மற்றும் ஜடேஜா சதம் அடித்தனர். இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 4 விக்கெட்டும், ரேஹான் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் ரோகித் சர்மா 19 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தனது 39 வது ஓவரில் மார்க் வுட்டின் பந்திற்கு பவுண்டரி அடித்து தனது 3வது டெஸ்ட் சத இலக்கை அடைந்தார். சுப்மன் கில்லுடன் இணைந்து சிக்ஸர், பவுண்டாரிகளாக விளாசிய ஜெய்ஸ்வால் 5 சிக்ஸர், 9 பவுண்டரி அடித்து, 104 ரன்கள் எடுத்து சதமடித்தார்.
𝗧𝗵𝗲 𝗳𝗶𝗿𝘀𝘁 𝘁𝗶𝗺𝗲 𝘄𝗮𝘀 𝘀𝗼 𝗻𝗶𝗰𝗲 𝗵𝗲 𝗷𝘂𝘀𝘁 𝗵𝗮𝗱 𝘁𝗼 𝗱𝗼 𝗶𝘁 𝘁𝘄𝗶𝗰𝗲 😎#YashasviJaiswal notches up his 2nd 2️⃣0️⃣0️⃣ in the #IDFCFirstBankTestSeries 🤩#INDvENG #BazBowled #JioCinemaSports pic.twitter.com/ObS0J0pF6j
— JioCinema (@JioCinema) February 18, 2024
இதனையடுத்து ரிட்டயர் ஹட் செய்துவிட்டு ஜெய்ஸ்வால் சென்ற நிலையில், இந்திய அணி மூன்றாம் நாள் முடிவில் 196 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதன் வாயிலாக இங்கிலாந்தைவிட 322 ரன்கள் இந்திய அணி முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் சுப்மன் கில், குல்தீப் யாதவ் ஜோடி 55 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் 91 ரன்னில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ஜெய்ஸ்வால், சர்பராஸ் இணை அதிரடியாக ஆடியது. இதில் சர்பராஸ் கான் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்தார்.
இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி ஜெய்ஸ்வாலின் அதிரடி இரட்டை சதத்துடன் நான்கு விக்கெட் இழப்பிற்கு 440 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. இதனை அடுத்து 557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்த அணி 122 ரன்களில் சுருண்டு படுதோல்வி அடைந்துள்ளது
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் (அதிக ரன்கள் வித்தியாசத்தில்) தனது மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு கடந்த 2021 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்ததே அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாக இருந்தது. இன்று ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்களும் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 319 ரன்களும் எடுத்தது.