Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

3வது டி20 போட்டி | தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி!

10:03 PM Jul 09, 2024 IST | Web Editor
Advertisement

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

Advertisement

இந்தியா - தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.  2வது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது.இந்த நிலையில் கடைசி ஆட்டத்தில் வென்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்திய வீராங்கனைகள் களமிறங்கினர். இதில் ,டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் தென் ஆப்பிரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.  இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 17.1 ஓவரில் 84 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் அதிகபட்சமாக  டாஸ்மின் பிரிட்ஸ் 20 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் பூஜா வஸ்த்ராகர் 4 விக்கெட்டும், ராதா யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது.

தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா, ஷாபாலி வர்மா களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதனால் 10.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 88 ரன்கள் எடுத்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஸ்மிருதி மந்தனா 54ரன்கள், ஷாபாலி வர்மா 27ரன்கள் எடுத்தனர். இந்த வெற்றியால் டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

Tags :
#SportsCricketINDW vs RSAWRSAW vs INDWwomens cricketWomens T20
Advertisement
Next Article