For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

3D பணிகளை தொடங்கியது #Kanguva படக்குழு!

08:52 AM Oct 02, 2024 IST | Web Editor
3d பணிகளை தொடங்கியது  kanguva படக்குழு
Advertisement

சிறுத்தை சிவா இயக்கும், சூர்யா நடிக்கும் ‘கங்குவா’திரைப்படத்தின் 3டி பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது.

Advertisement

பிரபல இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து, கங்குவா திரைப்படத்தை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் 3டி முறையில் ஒரு சரித்திர படமாக உருவாகியுள்ளது.

‘கங்குவா’ திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக உள்ள நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்தத் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படமும் அதே தேதியில் வெளியாக உள்ளதால் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இணையவாசிகள் விமர்சனங்களை தெரிவித்து வந்தனர். இதையடுத்து,‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவித்தது.

இதையும் படியுங்கள் : Israel மீது #Iran நடத்திய ஏவுகணை தாக்குதல் - இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெ. அதிபர் பைடன் அதிரடி உத்தரவு!

இன்னும் ஒரு மாதத்தில் கங்குவா திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இறுதிகட்ட பணிகளை படக்குழு தீவிரமாக மேற்கொண்டுள்ளது. இதையடுத்து, இந்த திரைப்படம் 3டி முறையில் வெளியாக உள்ள நிலையில், 3டி பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை அத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி தனது எக்ஸ் தளபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement