Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கரூரில் ஐயப்ப சேவா சங்கம் நடத்திய 37-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை!

09:22 AM Dec 27, 2023 IST | Web Editor
Advertisement

கரூரில் ஸ்ரீ பசுபதீஸ்வரா ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 37-ம் ஆண்டு திருவிளக்கு
பூஜை நடைபெற்றது. 

Advertisement

கரூர் பசுபதீஸ்வரர் கோயில் அருகே செயல்பட்டு வரும் ஸ்ரீ பசுபதீஸ்வரா ஐயப்பா
சேவா சங்கம், பல்வேறு ஆன்மீக பணிகளை மேற்கொண்டு, பக்தி மூலம் பல்வேறு சமூக
நற்காரியங்களை வழங்கி வருகிறது.  இதில் ஒரு பகுதியாக, ஆண்டுதோறும் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:  சபரிமலையில் 39 நாட்களில் 31.43 லட்சம் பேர் தரிசனம்: ரூ.204.30 கோடி வருவாய்!

அந்த வகையில் நேற்று (டிச.27) 37-ம் ஆண்டு திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.  இந்த பூஜையில் கரூர் நகர பகுதியை சேர்ந்த 300- க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வழிபட்டனர்.  பூஜையின் போது சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்க பூஜையில் பங்கேற்ற பெண்கள் வேதமந்திரங்களை உச்சரித்து, உலக நன்மை வேண்டியும், ஆரோக்கியம் மற்றும் குடும்ப நலன் வேண்டியும் வணங்கினர்.

Tags :
karurnews7 tamilNews7 Tamil UpdatesPasupatheeswarar TempleThiruvilakku Puja
Advertisement
Next Article