Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

எம்ஜிஆர் நினைவு 36-வது தினம் | முன்னாள் முதலமைச்சர் ஓ.ப்.எஸ் மலர் தூவி மரியாதை

01:22 PM Dec 24, 2023 IST | Web Editor
Advertisement

அ.தி.மு.க. நிறுவனரும் மறைந்த முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 36 வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

Advertisement

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் 36ஆவது நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செய்தார். மேலும், அவருடன் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆர் பி உதயகுமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

இதையும் படியுங்கள் : பூமியின் கடைசி நாள் எப்போது?... அதுவரை மனிதர்கள் இருப்பார்களா?...

இந்நிலையில், எம்.ஜி.ராமச்சந்திரனின் 36ஆவது நினைவு நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் அவரது படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்  வந்து எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இது தவிர அரசியல் கட்சியினரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து அஞ்சலி செலுத்திய பின்னர் தொண்டர்களுடன் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

Tags :
0PSMGRMGR36MGRamachandranTamilNadu
Advertisement
Next Article