தமிழ்நாட்டில் 36 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு!
தமிழ்நாட்டில் முதல் கட்டமாக 36 சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் ரூ.5 முதல் ரூ.30 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டு தோறும் இரண்டு முறை சுங்கச்சாவடி கட்டணத்தை மாற்றி அமைத்து வருகிறது. அதன்படி முதன்மை சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதமும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.
அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 339 சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 62 சுங்கச்சாவடிகள் இருக்கும் நிலையில், இவற்றில் முதற்கட்டமாக 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
இதையும் படியுங்கள் : ‘சில்லுனு ஒரு காதல்’ இரண்டாம் பாகத்தில் ஹீரோ இவரா? – வெளியான புதிய தகவல்!
அதன்படி கட்டணம் ரூ.5லிருந்து ரூ.30தாக உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் ரூ. 200லிருந்து ரூ.400ஆக உயர்ந்துள்ளது. வழக்கத்தைப் போல ஏப்ரல் 1 ஆம் தேதி அமலுக்கு வர வேண்டிய கட்டண உயர்வு, தேர்தலையொட்டி இரண்டு மாதங்களுக்கு ஒத்தி வைப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்தது. அதன்படி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.