Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம் !

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
07:24 AM Feb 23, 2025 IST | Web Editor
Advertisement

தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவ்வப்போது சிறைப்பிடிக்கும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.

Advertisement

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்தில் இருந்து உரிய அனுமதிச் சீட்டு பெற்று விசைப்படகுகளில் வழக்கம்போல் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 32 பேரை கைது செய்தனர். மேலும் மீனவர்களின் 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் 32 பேரையும் தலைமன்னார் கடற்கரை முகாமுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு பின்னர் மீனவர்களை மன்னார் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சக மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனடியாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

Tags :
ActionarrestedatrocityCentral governmentfamilyFishermenNavyRameswaramRequestSri LankanState
Advertisement
Next Article