Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு” - செந்தில் பாலாஜி பேட்டி..!

கரூர் தவெக தலைவர் விஜயின் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இதுவரை 31 பேர் உயிரிழந்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்
09:49 PM Sep 27, 2025 IST | Web Editor
கரூர் தவெக தலைவர் விஜயின் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இதுவரை 31 பேர் உயிரிழந்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்
Advertisement

தவெக தலைவர் விஜயின் கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர்  மயக்கம் அடைந்து கீழே விழுந்தனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Advertisement

இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோரை உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

இந்த நிலையில் தவெக தலைவர் விஜயின் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இதுவரை 31 பேர் உயிரிழந்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில்

கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 58 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு  உடனடியாக சிகிச்சை வழங்க முதலமைச்சர் ஸ்டாலின்  உத்தரவு வழங்கி உள்ளார். நாமக்கல் மற்றும் சேலம் மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் வர உத்தரவிடப்பட்டு உள்ளது. தேவையான அளவு மருத்துவர்கள், உபகரணங்கள் உள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்கள் இடம் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளோம். கூடுதலாக உயிர் சேதம் ஏற்ப்பட்டு விடக்கூடாது என தீவிரமாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் எடுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சழுந்துள்ளது.

Tags :
karurstampadlatestNewssenthilnalajiTNnewstvkvijay
Advertisement
Next Article