For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சபரிமலையில் 39 நாட்களில் 31.43 லட்சம் பேர் தரிசனம்: ரூ.204.30 கோடி வருவாய்!

02:57 PM Dec 26, 2023 IST | Web Editor
சபரிமலையில் 39 நாட்களில் 31 43 லட்சம் பேர் தரிசனம்  ரூ 204 30 கோடி வருவாய்
Advertisement

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைக்கான 39 நாட்களில் 31.43 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாகவும், கோயில் வருவாயாக ரூ.204.30 கோடி வசூல் கிடைத்துள்ளதாகவும் கோயில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் இன்று (டிச.26) காலை சபரிமலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“சபரிமலைக்கு சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 18 கோடி ரூபாய் வருமானம் குறைந்துள்ளது. மண்டல சீசன் துவங்கி 39 நாட்களுக்கு பிறகு மொத்த வருவாயாக ரூ.204 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.222.98 கோடி வருவாய் கிடைத்தது. ஏலம் மற்றும் சில்லறையாக பெறப்பட்ட நாணயங்களையும் எண்ணும்போது இந்த எண்ணிக்கை மாறும்.

நன்கொடையாக ரூ.63.89 கோடி கிடைத்துள்ளது. அரவண பிரசாதம் விற்பனை மூலம் ரூ.96.32 கோடி கிடைத்துள்ளது. அப்பம் விற்பனை மூலம் ரூ.12 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது. மண்டல காலம் தொடங்கி நேற்று வரை 31,43,163 பேர் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர். தேவசம் போர்டு அன்னதான மண்டபம் மூலம் நேற்று வரை 7,25,049 பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டுள்ளது.

வரம்புகள் இருந்தபோதிலும், பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புடன் சபரிமலை பக்தர்களுக்கு தேவசம் போர்டு சிறந்த வசதிகளை செய்து தந்தது. மண்டல பூஜை முடிந்து சபரிமலை நடை நாளை (டிச. 27) இரவு 11 மணிக்கு மூடப்படும். மகரவிளக்கு விழாவையொட்டி டிசம்பர் 30-ம் தேதி மாலை மீண்டும் நடை திறக்கப்படும். ஜனவரி 15-ம் தேதி மகரவிளக்கு விழா நடைபெறுகிறது. ஜனவரி 20-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். ஜனவரி 21-ம் தேதி காலை கோயில் நடை மூடப்படும்”

இவ்வாறு பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement