300 ஆண்டுகள் பழமையான பீரேஸ்வரர் கோயில் - சாணியடி திருவிழா!
ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே கும்டாபுரம் கிராமத்தில் சாணியடி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், தாளவாடியருகே கும்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பீரேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் தீபாவளி முடிந்த 3-ம் நாளில் நடைபெறும் சாணியடி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. பல தலைமுறைகளாக நடந்து வருகிறது. இத்திருவிழாவிற்கு தமிழ்நாடு மட்டுமல்லாம் கர்நாடகாவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள்.
இந்த ஆண்டு ‘சாணியடி திருவிழா’ வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவிற்கு முதல்நாளான நேற்று முன்தினம் கோயிலின் பின்பக்கம் ஊர்மக்கள் சாணத்தை குவித்து வைத்திருந்தனர். அதன்பின் பீரேஸ்வரரை கோயிலுக்கு அருகேயுள்ள
குளத்தில் நீராடச் செய்த பின் கோயிலுக்கு பின்புறம் குவித்து வைத்திருந்த சாணத்தை உருண்டையாக்கி ஒருவர் மீது ஒருவர் வீசியெறிந்து வழிபாடு நடத்தினர்.
இந்த நிகழ்வின் போது ஆண்கள் சட்டை அணிவதில்லை. சாணியடி நிகழ்வு நடந்தபிறகு,
பக்தர்கள் கோயிலுக்கு அருகிலுள்ள குளத்தில் குளித்துவிட்டு, பீரேஸ்வரரை
வணங்கினர்.