Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இளம்பெண்ணின் சிறுநீரகத்தில் 300 கற்கள்! காரணம் என்ன வெளியான அதிர்ச்சித் தகவல்!

10:23 AM Dec 16, 2023 IST | Jeni
Advertisement

தைவானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் சிறுநீரகத்தில் இருந்து 300 கற்கள் அகற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தைவானைச் சேர்ந்தவர் சியா யூ (Xiao Yu). 20 வயதான இவர், கடந்த வாரம் தைனான் நகரில் உள்ள மருத்துவமனையில், காய்ச்சல் மற்றும் முதுகு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அந்த பெண்ணின் சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

சிடி ஸ்கேனில் 5 மி.மீ. முதல் 2 செ.மீ. அளவிலான கற்கள் இருப்பதும், வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் கண்டறியப்பட்டது.  இதையடுத்து, சியா யூவின் சிறுநீரகத்தில் இருந்து பன் போன்ற வடிவத்திலான சுமார் 300 கற்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.

இதையும் படியுங்கள் : கலை வடிவமைப்பின் ‘தளபதி’ தோட்டா தரணி....!

தொடர்ந்து சில நாட்கள் ஓய்வுக்கு பின், சியா யூ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.  அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  மேலும், சியா யூ,  தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்து,  அதிகம் பபிள் டீ (Bubble Tea) குடித்ததே சிறுநீரகத்தில் கற்கள் உருவானதற்கான காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Tags :
BubbleTeaHealthKidneyStoneTaiwan
Advertisement
Next Article