காளஹஸ்தி கோயில் ராகு, கேது பூஜையில் ரஷ்ய நாட்டு பக்தர்கள்!
காளஹஸ்தி கோயிலில் 30 ரஷ்ய நாட்டு பக்தர்கள் ராகு, கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை செய்து கொண்டனர்.
ரஷ்ய நாட்டு மக்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி கோயிலுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சுமார் ஒரு ஆண்டு காலமாக காளஹஸ்தி கோயிலுக்கு வரும் ரஷ்ய நாட்டு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து காளஹஸ்தி கோயிலுக்கு வரும் அவர்கள் அங்கு சாமி கும்பிடுவதற்கு முன், கோயிலில் நடைபெறும் சர்ப்ப தோஷ நிவாரண பூஜையில் கலந்து கொள்வது வழக்கமாக உள்ளது.
இதையும் படியுங்கள்: சித்தராமையாவுக்கு ரூ.10,000 அபராதம் – கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி!
இந்த நிலையில் ரஷ்யாவில் இருந்து வந்த 30 பக்தர்கள் இன்று (பிப்.06) தலா ரூ.750
பணம் செலுத்தி டிக்கெட் வாங்கி, காளஹஸ்தி கோயிலில் ராகு கேது தோஷ நிவாரண பூஜை செய்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் காளஹஸ்தீஸ்வரரையும், ஞானபிரசுண்ணாம்பிகை தயாரையும் வழிபட்டனர். அவர்களுக்கு கோயில் அதிகாரிகள் காளஹஸ்தி கோயில் ஸ்தல வரலாறு பற்றி விவரமாக எடுத்துரைத்தனர்.