"நான் முதல்வன் திட்டம் மூலம் இதுவரை 30 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்" | அமைச்சர் #UdhayanidhiStalin பெருமிதம்!
நான் முதல்வன் திட்டம் மூலம் இதுவரை 30 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
போட்டி தேர்வுகளுக்கான உண்டு உறைவிடப் பயிற்சி மற்றும் நான் முதல்வன் குடிமைப்பணி தேர்வுக்கான படிபகத்தினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னையில் துவக்கிவைத்தார். மேலும், தமிழ்நாடு திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், இந்திய திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சான்றிதழ்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, மேடையில் பேசிய அவர் கூறியதாவது,
"நான் முதல்வன் திட்டம் மூலம் இதுவரை 30 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். நான் முதல்வன் திட்டம் தொடங்குவதற்கு முன்பு வரை தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு 36 பேர் மட்டுமே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றனர். நான் முதல்வன் திட்டம் தொடங்கிய பிறகு 46 பேர் வெற்றி பெற்றனர். இது தான் நான் முதல்வன் திட்டத்தின் வெற்றி. நான் முதல்வன் திட்டம் வந்த பிறகு தமிழ்நாட்டு மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் பல சாதனைகளை படைத்துள்ளனர். நாளை ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு வாழ்த்துகள்."
இவ்வாறு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.