Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு தண்டனை நிறுத்திவைப்பு! உச்சநீதிமன்றம் உத்தரவு!

03:39 PM Mar 11, 2024 IST | Web Editor
Advertisement

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி,  அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21-ந் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து பொன்முடி சார்பில் மூத்த வக்கீல் இ.சி.அகர்வலாவும்,  விசாலாட்சி சார்பில் வக்கீல் புல்கித் தாரேவும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.  இந்த மனுவில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்,  தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்கவும் கோரியுள்ளனர்.  மேலும் இடையீட்டு மனுவில் சிறையில் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.

இந்த நிலையில்,  முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்ததால், பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆக தொடர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Tags :
ex ministerformer Ministernews7 tamilNews7 Tamil UpdatesponmudiSupreme courtSupreme Court of india
Advertisement
Next Article