For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சட்டப் படிப்பு : விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்! பல்கலைக்கழகம் அறிவிப்பு!

09:49 PM Jul 31, 2024 IST | Web Editor
சட்டப் படிப்பு   விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்  பல்கலைக்கழகம் அறிவிப்பு
Advertisement

தமிழ்நாட்டில் 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 26 அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள் (சீர்மிகு சட்டப்பள்ளி உட்பட) இயங்கி வருகின்றன. இவற்றில் 3 ஆண்டு எல்எல்பி சட்டப் படிப்புகளுக்கு 2,530 இடங்கள் உள்ளன. இவை நடப்பு கல்வியாண்டு (2024-25) இணைய வழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 3-ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 16 ஆயிரம் மாணவர்கள் வரை விண்ணப்பித்து உள்ளனர்.

இதற்கிடையே மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கையை கருத்தில் கொண்டு மூன்றாண்டு எல்.எல்.பி. சட்டப்படிப்புக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 10-ஆம் தேதி 5.45 மணி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது

மேலும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சீர்மிகு சட்டப்பள்ளியில் பயிற்சி அளிக்கப்படும் 2 ஆண்டு முதுகலை (எல்.எல்.எம்) சட்ட படிப்பிற்கு விண்ணப்பங்களை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி மாலை 5:45 மணி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : பாரிஸ் ஒலிம்பிக் போட்டி: வில்வித்தையில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!

இதையடுத்து விருப்பமுள்ள மாணவர்கள் /www.tndalu.ac.in/ என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். கலந்தாய்வு விதிகள், விண்ணப்பக் கட்டணம் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று சட்டப் பல்கலைக்கழகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement