பீகாருக்குள் ஊடுருவிய 3 பயங்கரவாதிகள் - ஹை-அலர்டில் பீகார்!
பீகார் மாநிலத்திற்குள் பாகிஸ்தானை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் நுழைந்துள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உளவித்துறையின் தகவலின் படி இந்த மூன்று பயங்கரவாதிகள் பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஸ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் என உளவுத்துறையினர் சந்தேகித்துள்ளனர். மேலும் அவர்கள் ராவல்பிண்டியை சேர்ந்த ஹஸ்னைன் அலி, உமர்கோட்டை சேர்ந்த அடில் உசேன் மற்றும் பஹவல்பூரை சேர்ந்த முகமது உஸ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த மூன்று பயங்கரவாதிகளும்ஆகஸ்டு 2-வது வாரத்தில் நேபாள தலைநகர் காட்மாண்டுவை அடைந்து அங்கிருந்து நேபாள எல்லை வழியாக பீகார் மாநிலத்துக்குள் ஊடுருவியதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து பீகார் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் அங்கு பாதுகாப்பு படையினரும், மாநில போலீசாரும் இணைந்து பயங்ரவாதிகளை தேடும் பணியிஉல் ஈடுபட்டு உள்ளனர். மாநிலத்தின் முக்கிய இடங்கள் மற்றும் சோதனை சாவடிகள் அனைத்திலும் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையடுத்து அவர்களை பிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.