அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டதாக வைரலாகும் 3 படங்கள் - உண்மை என்ன?
This News Fact Checked by ‘Newsmeter’
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான நாடுகடத்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார். சட்டவிரோத குடியேற்றத்திற்காக நாடு கடத்தப்பட்ட பல இந்தியர்களை ஏற்றிச் சென்ற அமெரிக்க இராணுவ விமானம் புதன்கிழமை அமிர்தசரஸில் தரையிறங்கியது. இந்த வியானம் டெக்சாஸின் சன் அவ்டோனியோவிலிருந்து புறப்பட்டு பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. சில இந்த நிகழ்வுகளுக்கு மத்தியில், அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்திய சட்டவிரோத குடியேறிகளைக் காட்டுவதாகக் கூறி சில புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.
Border patrol walking them right back in to Mexico.
(Repost ) pic.twitter.com/rRQ7JcifDr
— Viral News NYC (@ViralNewsNYC) January 30, 2025
படம் 1: X இல் ஒரு பயனர் இந்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதில் சிலரின் கைகள் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளன. இந்தியர்களை நாடு கடந்தத் தொடங்குகிறது” என எழுதப்பட்டுள்ளது. அந்தப் படத்தில் சில ஆண்கள் தங்கள் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு நடப்பதைக் காட்டுகிறது.
உண்மை சரிபார்ப்பு: நியூஸ்மீட்டர் இந்தக் கூற்று தவறானது என்பதைக்
கண்டறிந்தது. கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் ஜனவரி 30, 2025 அன்று வெரிஃவைட் X பயனரான @viralnewsnyc பகிர்ந்த வீடியோ கிடைத்தது. இது பிப்ரவரி 3, 2025 அன்று அமெரிக்காவிலிருந்து இந்திய சட்டவிரோத குடியேறிகள் நாடு கடத்தப்படுவதற்கு முந்தையது. "எல்லை ரோந்துப் படையினர் அவர்களை மெக்சிகோவிற்குள் திருப்பி அனுப்புகிறார்கள்" என்ற தலைப்புடன் இந்த வீடியோ பகிரப்பட்டது.
வைரலாகும் புகைப்படம் இந்த வீடியோவிலிருந்து எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. எனவே, இந்தப் படத்திற்கும் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்திய சட்டவிரோத குடியேறிகளுக்கும் தொடர்பில்லாதது என்று நாங்கள் முடிவு செய்கிறோம்.
படம் 2: ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் இரண்டாவது புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அப்பதிவில் அமெரிக்காவின் தனது நாட்டை சுத்திகரிக்க தொடங்குகிறது! 205 இந்திய குடியேறிகளை நாடு கடத்தும் C-17 இராணுவ விமானம்." எனக் குறிப்பிட்டிருந்தது. படத்தில், பலர் முகமூடி அணிந்து, கணுக்கால் சங்கிலியால் கட்டப்பட்ட இராணுவ விமானத்திற்குள் அமர்ந்திருப்பதைக் காணலாம்.
உண்மை சரிபார்ப்பு: நியூஸ்மீட்டர் இந்தக் கூற்று தவறானது என்பதைக் கண்டறிந்தது. புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில், அசோசியேட்டட் பிரஸ்ஸின் இன்ஸ்டாகிராம் இடுகை அதே படத்தைக் கொண்டு ஜனவரி 31, 2025 அன்று பதிவேற்றியது.
மணிக்கட்டு மற்றும் கணுக்கால் கட்டப்பட்ட புலம்பெயர்ந்தோருடன் அமெரிக்க விம்பனப்படை ஜெட் விமானம் டெக்சாஸிலிருந்து கவுடமாலாவுக்கு புறப்பட்டு, நாடுகடத்தப்பட்டவர்களை ஏற்றிச் சென்றதாக இடுகை விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க எல்லை ரோந்து செய்தித் தொடர்பாளர் ஆர்லாண்டோ மாரெரோவின் கூற்றுப்படி எல்பாசோவில் உள்ள ஒரு இராணுவத் தளமான ஃபோர்ட் பிளிஸிலிருந்து விமானம் ஏழு மணிநேரம் பயணித்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்தப் படத்திற்கும் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்திய சட்டவிரோத குடியேறிகளுக்கும் தொடர்பில்லாதது என்று நாங்கள் முடிவு செய்கிறோம்.
Just as he promised, President Trump is sending a strong message to the world: those who enter the United States illegally will face serious consequences. pic.twitter.com/yqgtF1RX6K
— The White House (@WhiteHouse) January 24, 2025
படம் 3: X இல் ஒரு பயனர் இராணுவ விமானத்தில் ஏறும் போது பல ஆண்கள் கைவிலங்கிடப்பட்டிருக்கும் மூன்றாவது புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். பயனர் அதற்கு, இந்தியர்கள் நாடு கடத்தப்படுகிறார்கள். இது பெருமைக்குரிய விஷயமாக இருக்க வேண்டும் என்று தலைப்பிட்டுள்ளார்.
படத்தில் உள்ள வாசகம், 'அமெரிக்க இராணுவ விமானம் டெக்சாஸிலிருந்து 205 இந்தியர்களை நாடு கடத்தியது. டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான நடவடிக்கை" என்று கூறுகிறது.
உண்மை சரிபார்ப்பு: நியூஸ்மீட்டர் இந்தக் கூற்று தவறானது என்பதைக் கண்டறிந்தது. புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில், வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ கணக்கிலிருந்து X இல் அதே படத்தைக் கொண்ட ஒரு இடுகை ஜனவரி 24, 2025 அன்று வெளியிடப்பட்டது.
அந்தப் பதிவின் விளக்கம், ' வாக்குறுதியளித்தபடியே, அதிபர் டிரம்ப் உலகிற்கு ஒரு வலுவான செய்தியை அனுப்புகிறார்: அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைபவர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திப்பார்கள் ” என்று கூறியது.
எனவே இந்தப் படத்திற்கும் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்திய சட்டவிரோத குடியேறிகளுக்கும் தொடர்பில்லாதது என்று நாங்கள் முடிவு செய்கிறோம்.
முடிவு :
அமெரிக்க அரசால் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டார்கள் என சமூக ஊடகங்களில் மூன்று படங்கள் பரவி வருகின்றன. இதனை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அவை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்திய சட்டவிரோத குடியேறிக்களின் படங்கள் அல்ல என்பது தெளிவாகிறது. அவை அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு சமீபத்தில் நாடுகடத்தப்பட்டதாக தவறாகக் கூறப்படுகின்றன.
Note : This story was originally published by ‘Newsmeter’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.