For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் மேலும் 3 புதிய சுங்கச்சாவடிகள் - #NHAI அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி!

12:03 PM Sep 05, 2024 IST | Web Editor
தமிழ்நாட்டில் மேலும் 3 புதிய சுங்கச்சாவடிகள்    nhai அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி
Advertisement

தமிழ்நாட்டில் 3 இடங்களில் புதிய சுங்கச்சாவடிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.

Advertisement

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுமார் 70க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளை அமைத்து கட்டணங்களை வசூலித்து வருகிறது. ஆண்டுக்கு இருமுறை சுங்கச்சாவடிகள் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. பாதி சுங்கச்சாவடிகளில் முதல் 6 மாதத்திலும், மீதியுள்ள சுங்கச்சாவடிகளில் அடுத்த 6 மாதத்திலும் கட்டணம் உயர்த்தப்படும். தமிழ்நாட்டில் காலாவதியான சுங்கச்சாவடிகள் உள்ளதாகவும், அவற்றை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் மேலும் 3 இடங்களில் புதிதாக சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன. அதற்கான கட்டண வீதமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விழுப்புரம் மாவட்டம் நங்கிலி கொண்டான், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் கரிய மங்கலம் ஆகிய 3 இடங்களில் சுங்கச்சாவடிகளுக்கான கட்டண வீதங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

விழுப்புரம் நங்கிளிகொண்டான் சுங்கச்சாவடியில் ஒரு முறை சென்றுவர ரூ.60 முதல் 400 வரை கட்டணம் வசூலிக்கப்படும், ஒரே நாளில் சென்று திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.95 முதல் ரூ.600 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனவும், கரியமங்கலம் சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வர ரூ.55 முதல் ரூ.370 வரை சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும், ஒரே நாளில் சென்று திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.85 முதல் ரூ.555 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமான சுங்கச்சாவடிகள் (76 சுங்கச்சாவடிகள்) அமைந்துள்ள நிலையில், மேலும் 3 சுங்கச்சாவடிகளை அமைப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement