Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூர கொலை... பல்லடத்தில் பரபரப்பு!

10:43 AM Nov 29, 2024 IST | Web Editor
Advertisement

பல்லடத்தில் ஒரேக் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, சேமலைகவுண்டம்பாளையம் என்ற கிராமத்தில்
தெய்வசிகாமணி, அலமாத்தாள் ஆகிய தம்பதியினர், தங்களது தோட்டத்தில் உள்ள வீட்டில்
வசித்துக் கொண்டு விவசாயம் செய்து வந்துள்ளனர். இவர்களின் மகன் செந்தில்குமார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும்நிலையில், அவர் தனது மனைவி கவிதா மற்றும் குழந்தைகளுடன் கோவையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு தோட்டத்திற்கு வந்த மர்ம நபர்கள் தெய்வசிகாமணியை தோட்டத்தில் வைத்து வெட்டியதாக கூறப்படுகிறது. அதை தடுக்கச் சென்ற அலமாத்தாள் மற்றும் அவரது மகன் செந்தில்குமார் ஆகியோரையும் கொடூரமான முறையில் வெட்டியுள்ளனர்.

இதனையடுத்து இன்று காலை தெய்வசிகாமணியின் வீட்டிற்கு வந்த சவரத் தொழிலாளர் ஒருவர், மூன்று பேரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அவிநாசி பாளையம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவிநாசி பாளையம் காவல்துறையினர் மற்றும் பல்லடம் காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையிலான காவல்துறையினர், தடயவியல் நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் கொலை நடந்த இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்தும், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள்
யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
CrimeMurderpalladamPolice
Advertisement
Next Article