For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்திய 3 பேர் பலி - #EPS கண்டனம்!

12:41 PM Dec 05, 2024 IST | Web Editor
கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்திய 3 பேர் பலி    eps கண்டனம்
Advertisement

கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்திய 3 பேர் உயிரிழந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை பல்லாவரம், ஆலந்தூர் பகுதிகளில் மாநகராட்சி குழாயில் வந்த குடிநீரை குடித்த 30க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கடும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

"தாம்பரம் மாநகராட்சி 13-வது வார்டில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதில் 3 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. குடிநீர் என்பது மிக அடிப்படையான ஒன்று; அதனை மிகுந்த கவனத்துடன் விநியோகிக்க வேண்டியது அரசின் கடமை. புயல் கரையைக் கடந்ததும், குடிநீர், கழிவுநீர் குழாய்கள் இடையே எவ்வித கலப்பும் இன்றி முறையாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறதா? என்பதை அரசு உறுதிசெய்திருக்க வேண்டும்.

https://twitter.com/EPSTamilNadu/status/1864552304537411810?t=-mbmSIUgCUimAKB3WC5GNg&s=19

மெத்தனப் போக்குடன் அதை செய்யாமல் விடுத்து, சுகாதாரமற்ற குடிநீரால் மக்கள் உயிரோடு விளையாடியிருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உயிரிழந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளோருக்கு தக்க சிகிச்சை வழங்கி, அவர்கள் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்புவதை உறுதிசெய்து, தமிழ்நாடு முழுவதும் உடனடியாக சீரான, சுகாதாரமான குடிநீர் மக்களுக்கு வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்"

இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement