பாரீஸ் ரயில் நிலையத்தில் பயணிகளை கத்தியால் குத்திய மர்ம நபர் கைது: 3 பேர் காயம்!
03:59 PM Feb 03, 2024 IST 
                    | 
                            Web Editor
                
                 
    
                
                
     
            
    
             
             பாரீஸில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்படுவது இது முதல் சம்பவம் அல்ல என போலீசார் தெரிவித்துள்ளார்.  இதற்கு முன்பும் கத்தியால் குத்திய பல சம்பவங்கள் இதன் முலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.  கடந்த ஆண்டு ஜூன் மாதம், பிரான்சின் ஆல்ப்ஸ் பகுதியில் உள்ள ஒரு நகரத்தில்,  ஒருவர் கத்தியால் தாக்கி 6 குழந்தைகள் உட்பட 8 பேரை காயப்படுத்தினார்.
        
    
    
    
        
        
    
    
    
        
        
         
    
      
    
                 Advertisement 
                
 
            
        பிரான்சில் உள்ள கரே டி லியோன் ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் காயமடைந்தார்.
                 Advertisement 
                
 
            
        சனிக்கிழமையன்று, பிரான்சின் பாரிஸில் உள்ள Gare de Lyon ரயில் நிலையத்தில் ஒரு நபர் பலரை கத்தியால் தாக்கினார். AFP செய்தியின்படி, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
போலீஸ் வட்டாரத்தில், "சந்தேக நபர் தனது தாக்குதலின் போது எந்தவொரு மத முழக்கங்களையும் எழுப்பவில்லை. அவரிடம் இருந்த இத்தாலிய ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தனர்.
 Next Article