For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கனடாவில் 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டது உள்நாட்டு அரசியல்" - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு!

05:45 PM May 05, 2024 IST | Web Editor
கனடாவில் 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டது உள்நாட்டு அரசியல்    வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு
Advertisement

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்த மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெரிவிக்கும் வரை காத்திருப்போம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement

கனடாவில் இருந்த காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கனடாவில் கொலைசெய்யப்பட்டார்.  இந்த கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்தாண்டு சொன்னது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்தக் குற்றச்சாட்டையும் இந்தியா மொத்தமாக நிராகரித்தது.

இதற்கிடையே ஹர்தீப் சிங் கொலை தொடர்பாகக் கரன் பிரார் (22) கமல்ப்ரீத் சிங் (22) கரன்ப்ரீத் சிங், (28) ஆகிய மூன்று பேரை கனடா போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மூன்று பேரும் ஆல்பர்ட்டா என்ற பகுதியில் வசிக்கும் non-permanent residents என்றும் விசாரணை அதிகாரி மன்தீப் முகர் தெரிவித்தார். அவர்கள் மீது கொலை மற்றும் சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : வெயிலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு புதிய ஏ.சி வார்டுகள் – மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஏற்பாடு!

அதேநேரம் அந்த மூன்று பேருக்கும் ஒருவரை மற்றொருவருக்குத் தெரியாதாம். இதற்கிடையே இந்திய அரசுடன் அவர்களுக்குத் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். கொலை விசாரணையும் தொடர்ந்து நடத்தி வருவதாகவும் ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் உதவி ஆணையர் டேவிட் டெபூல் தெரிவித்தார்.

இந்நிலையில், கனாடா காவல்துறையின் கைது நடவடிக்கை குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது :

"தேர்தல் நடைபெற உள்ள கனடாவில் இப்போது நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் உள்நாட்டு அரசியல். இந்த கொலைக்கும் இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இரு நாடுகளுக்கும், இரு நாட்டு உறவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அத்தகைய நபர்களுக்கு விசா, சட்டப்பூர்வ அங்கீகாரம் அல்லது அரசியல் இடத்தை வழங்க வேண்டாம் என்று நாங்கள் பலமுறை கனடாவிடம் கூறினோம். ஆனால் கனடா அரசாங்கம் எதையும் செய்யவில்லை. காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளிட்ட 25 பேரை நாடு கடத்தும்படி இந்தியா கோரிக்கை வைத்தது. அதையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை.

கைது செய்யப்பட்ட இந்தியர்கள் பற்றிய எந்த ஆதாரத்தையும் கனடா அரசு இதுவரை தரவில்லை. சில வழக்குகளில் அவர்கள் எங்களிடம் எந்த ஆதாரத்தையும் பகிர்ந்து கொள்வதில்லை. காவல்துறை விசாரணை அமைப்புகளும் எங்களுக்கு ஒத்துழைப்பதில்லை. அரசியல் நிர்பந்தம் காரணமாகவே இந்தியாவை குறை கூறுகிறார்கள். கனடாவில் தேர்தல் வருவதால் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகிறார்கள்"

இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
Advertisement