For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘சர்தார் 2’  திரைப்படத்தில் இணையும் 3 நடிகைகள்?

08:04 PM Jul 30, 2024 IST | Web Editor
‘சர்தார் 2’  திரைப்படத்தில் இணையும் 3 நடிகைகள்
Advertisement

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘சர்தார் 2’  திரைப்படத்தில் 3 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சர்தார்’.  தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்தப் படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இத்திரைப்படத்தில் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, யூடியூப் பிரபலம் ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

தேசத்துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட உளவாளி, உண்மையில் தேசநலனுக்காக எத்தகைய தியாகங்களைச் செய்கிறார் என்பதே இத்திரைப்படத்தின் கதை.  இதில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்திருந்தார்.  இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி,  ‘சர்தார் 2’  திரைப்படத்தின் பணிகள் கடந்த 12ம் தேதி பூஜையுடன் தொடங்கியது.

‘சர்தார் 2’ திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி மற்றும் எஸ்.ஜே. சூர்யா இணைந்து நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்த நிலையில், இத்திரைப்படத்தில் நடிகைகள் பிரியங்கா மோகன், மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் நாயகிகளாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement