அமெரிக்க பயணம் - கமலா ஹாரிஸ் மற்றும் ட்ரம்பை சந்திக்காத #PMModi | ஏன் தெரியுமா?
3 நாட்கள் அமெரிக்காவுக்கு பயணம் செய்த பிரதமர் மோடி ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர்களான கமலா ஹாரிஸ், டோனால்ட் ட்ரம்ப் ஆகியோரை ஏன் சந்திக்கவில்லை என சர்ச்சையான நிலையில் அதுகுறித்த விளக்கம் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி 3 நாட்கள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு சென்றார். மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு முதல் முறையாக அமெரிக்கா சென்றார். அங்கு நடைபெற்ற குவாட் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்திய வம்சாவளியினர், அமெரிக்க வாழ் இந்தியர்களையும் ஆகியோரை சந்தித்தார்.
குவாட் மாநாட்டை தொடர்ந்து நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற உச்சி மாநாட்டிலும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இதன் ஒருபகுதியாக பாலஸ்தீன அதிபர் முஹமது அப்பாஸ், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ஆர்மேனிய பிரதமர் நிகோல் பஷினியன் உள்ளிட்ட தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த பிரதமர் மோடி உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க இந்தியா தயாராக இருப்பதாக உறுதியளித்தார். தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனது 3 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார்.
இதையும் படியுங்கள் : பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட #Karthi… காரணம் என்ன?
அமெரிக்காவில் தற்போது தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளாராக களமிறங்கியுள்ள இந்திய வம்சாவழியைச் சார்ந்த கமலா ஹாரிஸையோ அல்லது குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பையோ சந்திக்கவில்லை. பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத் திட்டத்தில் அமெரிக்க அதிபர் வேட்பாளர்களை சந்திக்கும் திட்டம் இல்லை என கூறப்படுகிறது.
பிரதமர் மோடியின் பயணத்தை குறிப்பிட்டு பிரசாரம் செய்யும் ஜனநாயக கட்சிக்கு ஆதரவான ஊடகங்கள் குடியரசுக் கட்சி வேட்பாளரான டிரம்பை பிரதமர் மோடி புறக்கணித்துவிட்டார் என தெரிவித்து வருகின்றன. அதே வேளையில் பிரதமர் மோடி தன்னைச் சந்தித்தார் என ட்ரம்ப் பேசியது பெரும் சர்ச்சையான நிலையில் இதற்கு முன்னாள் வெளியுறவுத் துறை செயலர் விளக்கம் அளித்துள்ளார்.
“ஜனநாயகக் கட்சியினரோ அல்லது குடியரசுக் கட்சியினரோ ஆட்சிக்கு வருவதில் இந்தியாவுக்கு எந்த பிரச்னைகளும் இல்லை. பில் கிளிண்டன் காலத்திலிருந்தே இருதரப்பிடையே நல்ல உறவு இருந்து வருகிறது. ஒரு வேட்பாளருக்கு எதிராக மற்றொரு வேட்பாளரை ஊக்குவிக்க பிரதமர் மோடிக்கு விருப்பம் இல்லை. ஏனெனில் இது தேர்தல் ஜனநாயகம் உள்ள ஒரு நாட்டில் இது தேர்தலில் குறுக்கீடு செய்வதில் வழிவகுக்கும்” என முன்னாள் வெளியுறவுத் துறை செயலர் தெரிவித்துள்ளார்.