2வது டி20 போட்டி – இந்தியா vs ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்..!
இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டி20 ஆட்டம் இன்று இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கியது. இந்த தொடரின் முதல் ஆட்டம் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கிரிக்கெட் தொடருக்காக ஆப்கானிஸ்தான் அணி இந்தியா வந்துள்ளது. டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கு இரு அணிகளும் தயாராகும் வகையிலான தொடராக இந்த டி20 தொடர் அமையும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : பொங்கல் பண்டிகை – சென்னையில் இருந்து 8 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்…!
இதில் மொகாலியில் நடந்த 1- வது ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று (ஜன.14) மாலை 7 மணி அளவில் நடைபெற உள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஓவர் சர்வதேச போட்டியில் 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5 ஆட்டங்களில் இந்தியா வெற்றி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. ஆப்கானிஸ்தான் ஒன்றில் கூட வெற்றி கண்டதில்லை. இந்தூர் மைதானத்தில் இந்திய அணி முன்று 20 ஓவர் போட்டியில் விளையாடி 2-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்து இருக்கிறது.