Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டி : இந்தியாவுக்கு 162 ரன்கள் இலக்கு!

09:44 PM Jul 28, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டியில் இந்திய அணிக்கு 162 ரன்களை இலங்கை அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement

பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி கடந்த சனிக்கிழமை (29.06.2024) சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதால் நாடே கொண்டாட்டத்தில் ஆழ்ந்தது. இதைத்தொடர்ந்து ஜிம்பாப்வேயில் நடந்த டி20 தொடரை இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதனிடையே, இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா - இலங்கை அணி நேரடியாக மோதுகின்றன. இதில் நேற்று (ஜூலை 27) நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரண்டாவது டி20 போட்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஜூலை 28) நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிஷாங்கா மற்றும் குஷல் மெண்டிஸ் களம் இறங்கினார்கள். குசல் மெண்டிஸ் 11 பந்துகள் களத்தில் நின்று 10 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார்.

அப்போது குசல் பெரேரா களத்திற்கு வந்தார். நிஷாங்கா  மற்றும் பெரேரா ஜோடி நிதானமாக விளையாடியது. 24 பந்துகள் களத்தில் நின்ற நிஷாங்கா 5 பவுண்டரிகள் விளாசி 32 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் கமிந்து மெண்டிஸ் களம் இறங்கினார். அவர் 26 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க மறுபுறம் அதிரடியாக விளையாடி வந்த குசல் பெரேராவும் ஆட்டமிழந்தார்.

மொத்தம் 34 பந்துகள் களத்தில் நின்ற அவர் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 53 ரன்கள் குவித்தார். அடுத்ததாக களம் இறங்கிய வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழக்க 20 ஓவர்கள்  முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலங்கை அணி 161 ரன்கள் எடுத்தது. 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்ய உள்ளது இந்திய அணி.

Tags :
IND vs SLindian teamNews7Tamilnews7TamilUpdatesSL vs INDSrilankaT20 match
Advertisement
Next Article