Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

2ம் கட்ட மக்களவை தேர்தல்: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வாக்களித்தார்!

08:50 AM Apr 26, 2024 IST | Web Editor
Advertisement

13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 88 தொகுதிகளில் 2ம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது வாக்கை பதிவு செய்தார்.

Advertisement

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 543 தொகுதிகளுக்கு மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கடந்த 19-ம் தேதி தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 70 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளே பதிவாகின.

இந்நிலையில், இன்று அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்குவங்கம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 88 தொகுதிகளில் இரண்டாம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து பகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. அதேநேரம் உள்ளூர் சூழலை சார்ந்து வாக்குப்பதிவு முடிவடையும் நேரம் மாறுபடுகிறது.

முன்னதாக இரண்டாம் கட்டத்தில் மொத்தமாக 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் மத்திய பிரதேச மாநிலம் பேடுல் தொகுதியில், பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர்  திடீரென உயிரிழந்தார். இதன் காரணமாக அந்த தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் 7-ம் தேதி அன்று அங்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

கேரளாவில் 20 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது வாக்கை செலுத்தினார். காலை 8 மணி நிலவரப்படி கேரளாவில் 6.30% ஓட்டுகள் பதிவாகியுள்ளது.

Tags :
Election commissionElection2024Elections2024KeralaLoksabha ElectionLoksabha Elections 2024News7Tamilnews7TamilUpdatesPinarayi VijayanSecond Phase
Advertisement
Next Article