Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரமாண்ட கப்பலில் ஆனந்த் அம்பானி திருமணத்தின் 2-வது முன்வைபவம் - விருந்தினர்கள் முதல் விண்வெளி தீம் வரை... வெளியான அப்டேட்!

01:04 PM May 27, 2024 IST | Web Editor
Advertisement

பிரமாண்ட கப்பலில் ஆனந்த் அம்பானியின் திருமணத்தின் 2-வது முன்வைபவம் நடைபெற உள்ள நிலையில்,  அதன் முக்கிய அம்சங்களின் தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Advertisement

பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19, 2023-ல் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.  மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் இல்லமான அன்டில்லாவில் குஜராத் மாநில பாரம்பரியப்படி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ஆனந்த் அம்பானிக்கும்,  அவரது காதலியான ராதிகா மெர்செண்டுக்கும் வருகின்ற ஜூலை மாதம் 12-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.  ஏற்கனவே மகள் இஷா அம்பானி மற்றும் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணங்களை வெகு விமர்சையாக நடத்தி முடித்த முகேஷ் அம்பானி,  தற்போது இளைய மகனான ஆனந்த் அம்பானி திருமணத்தையும் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்து வருகிறார்.

அதற்கான முன் திருமண வைபவங்கள் குஜராத் மாநிலம் ஜாம் நகரில்,  மார்ச் 1 முதல் 3 ஆம் தேதி வரை நடைபெற்றது.  இந்த முன் திருமண வைபவத்தில் நடிகர்கள் அமிதாப் பச்சன்,  ஷாருக்கான்,  சல்மான் கான்,  அமீர் கான்,  ரஜினி காந்த், சஞ்சய் தத்,  அபிஷேக் பச்சன்,  ராம் சரண்,  சயீப் அலிகான்,  ரன்பீர் சிங்,  ரன்வீர் சிங், நடிகைகள் ஐஸ்வர்யா ராய்,  கரீனா கபூர்,  தீபிகா படுகோன்,  சாரா அலிகான்,  ஆலியா பட், ஜான்வி கபூர்,  கேத்ரினா கைஃப்,  இயக்குநர் அட்லி உட்பட ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் கலந்து கொண்டனர்.

கிரிக்கெட் வீரர்கள் சச்சின்,  தோனி,  ரோகித் சர்மா,  ஹர்திக் பாண்டியா,  பிராவோ,  ரஷித் கான் உட்பட ஏராளமான விளையாட்டு பிரபலங்களும் விழாவில் பங்கேற்றனர். இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்தும் 1,000 - த்திற்கும் மேற்பட்ட சிறப்புவிருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில்,  நாளை முதல் மே 30ம் தேதி வரை தெற்கு பிரான்ஸ்  கடற்கரையோரத்தில் சொகுசு கப்பலில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் இரண்டாவது முன் திருமண வைபவம் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த கொண்டாட்டத்தில் சுமார் 800 விருந்தினர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும்,  600 ஊழியர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.

இத்தாலியில் இருந்து மே29 அன்று புறப்படும் இந்த கப்பல் 4380 கி.மீ தூரம் பயணம் செய்யும்.  மே 30 அன்று, விருந்தினர்கள் ரோமில் சுற்றுலா செல்கின்றனர்.  அதைத் தொடர்ந்து இரவு விருந்து நடைபெறும்.  மே 31 அன்று விழாக்களுக்குப் பிறகு,  விருந்தினர்கள் கேன்ஸில் இறங்குவார்கள்.  ஜூன் 1-ம் தேதி இத்தாலியின் போர்டோபினோவில் விழாக்கள் நிறைவடையும்.

இவ்விழாவில் ஷாருக்கான், அமீர்கான், சல்மான் கான், அக்ஷய் குமார், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், ரன்வீர் சிங், தீபிகா படுகோன், கத்ரீனா கைஃப், விக்கி கவுஷல், ரன்பீர் கபூர், ஆலியா பட், எம்.எஸ்.தோனி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.  கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எம்.எஸ்.தோனி, தனது மனைவி மற்றும் மகளுடன் இங்கிலாந்திற்கு புறப்பட்டுச் சென்றார்.  அதேபோல் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் அவர்களின் மகள் ரஹா கபூர், ரன்வீர் சிங், சல்மான் கான் ஆகியோரும் புறப்பட்டு சென்றனர்.

திருமணத்திற்கு முந்தைய பயணத்தின் மிகவும் சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று, முழு கொண்டாட்டமும் விண்வெளி தீமாக இருக்கும்.  அதற்கேற்ப ராதிகா மெர்ச்சன்ட் ஒரு தனித்துவமான ஆடையை அணிந்திருப்பார்.  சமீபத்தில், அவரது ஆடையின் சில படங்கள் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டது.

இதனிடையே ஜூலை மாதம் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஸ்டோக் பார்க்கில் இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த திருமண நிகழ்ச்சியில் முக்கிய வி.ஐ.பி.க்கள்,  திரைப்பட பிரபலங்கள்,  கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags :
| radhika merchantambaniAnant AmbaniAnant Radhika WeddingGujaratJam NagarMarriage
Advertisement
Next Article