For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிறப்புறுப்பில் 28 தையல்கள்...17 வயது சிறுவனால் 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஐந்து வயது சிறுமி உயிருக்கு போராடி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  
04:12 PM Feb 28, 2025 IST | Web Editor
பிறப்புறுப்பில் 28 தையல்கள்   17 வயது சிறுவனால் 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
Advertisement

மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் பிப்.22ஆம் தேதி, 5 வயது சிறுமி ஒருவரை அவரின் பக்கத்து வீட்டுக்காரரான 17 வயது சிறுவன், குடிபோதையில் அருகில் இருந்த பாழடைந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன், சுவற்றில் பலமுறை சிறுமியின் தலையை மோதியுள்ளான்.

Advertisement

இதனால் சிறுமி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். அப்போது சிறுமியின் தம்பியும், சில குழந்தைகளும் பாதிக்கப்பட்ட சிறுமியையும், 17 வயது சிறுவனையும் பார்த்ததாக கூறப்படுகிறது. தனது அக்கா ரத்த வெள்ளத்தில் இருந்ததை பார்த்த சிறுவன், கத்தியுள்ளான். இதனையடுத்து குற்றவாளி சிறுமியை அங்கு போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளான்.

இரண்டு மணிநேர தேடலுக்கு பிறகு சிறுமியின் பெற்றோர் அவரை பார்த்துள்ளனர். இதனையடுத்து சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சுயநினைவு திரும்பிய பிறகு, குற்றவாளி தன்னை மடியில் வைத்து கொடூரமான செயல்களை செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார்.  சிறுமி தற்போது குவாலியரில் உள்ள ஒரு மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார்.

இதுதொடர்பாக பேசியுள்ள மருத்துவர்கள், உடல் முழுவதும் காயங்களுடன்,  அந்தரங்க உறுப்புகள் பலத்த சேதமடைந்து சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது பிறப்புறுப்புகளில் 28 தையல்கள் போடப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். 

“குற்றம் சாட்டப்பட்டவரை தூக்கிலிட வேண்டும் அல்லது அனைவரது முன்னிலையிலும் வைத்து சுட்டுத்தள்ள வேண்டும்” என்று சிறுமியின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், குற்றவாளிக்கு உடனடியாக தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
Advertisement