27 வயது ஜாக்கி சானை களமிறக்கிய படக்குழு... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
நடிகர் ஜாக்கி சானின் 70 வயது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து, ‘ஜாக்கி சானுக்கு வயசாகிருச்சா...’ எனக் கண்ணீர் விட்ட தனது ரசிகர்களுக்காக 27 வயது ஜாக்கி சானை படக்குழு களமிறக்கியுள்ளது.
ஹாலிவுட்டில் திறமையான பல நடிகர்களின் ஆதிக்கத்துக்கு நடுவே ஆசிய நாடான ஹாங்காங்கைச் சேர்ந்த ஒருவர் ஹாலிவுட்டில் கால் பதித்தவர்தான் ஜாக்கி சான். இவர் தற்காப்புக் கலைகளில் ஒன்றான குங்ஃபூவை தன் சிறு வயதிலேயே பழகியிருந்தார். ப்ரூஸ் லீ, ஜெட் லீ போன்ற ஜாம்பவான்களுக்கு மத்தியில் தனித்துத் தெரிய குங்ஃபூ என்ற கலையை வேறுவிதமாகப் பயன்படுத்தியவர் ஜாக்கி சான். முதலில் புரூஸ்லீ ஸ்டண்ட் கலைஞராக திரையில் அறிமுகமாகி, பிறகு ஹாலிவுட் உலகில் இவருடைய படங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
இந்த 2024-ம் ஆண்டில் நான்குக்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 70 வயதை தொட்டுவிட்ட ஜாக்கிசானின் தற்போதைய புகைப்படம் ஒன்று அண்மையில் வெளியானது. அதில் நரைத்த தலையுடன் காணப்படும் ஜாக்கிசானின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
நரைத்த தலையுடன் காணப்படும் ஜாக்கிசானை பார்த்து, “இவருக்கும் வயதாகுமோ” என்கிற ஆச்சரியத்தோடு பகிர்ந்தனர் அவருடைய ரசிகர்கள். பின்பு, அது படத்திற்காகப் போடப்பட்ட கெட்டப் என்றும் ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் ஆறுதல் படுத்தினார் ஜாக்கி. இருந்தாலும் அவருக்கு 70 வயதாகி விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.